புடினை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ள நாடுகள்
உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து பேசினார்.
சமர்கண்டில் நடந்த சந்திப்பின் போது மோடி புடினிடம் கூறுகையில், "இன்றைய காலமானது, போர் நடத்துவதற்கான காலம் அல்ல. இது குறித்து நான் உங்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்" என்று புடினிடம் கூறினார்.
அதற்கு, "உங்கள் கவலைகள் பற்றி எனக்குத் தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று மோடியிடம் புடின் கூறினார். இந்த இரு தலைவர்கள் உரையாடல் குறித்து அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
புடினை எதிர்த்து கேள்வி கேட்கும் நாடுகள்
வெள்ளை மாளிகை தரப்பில் வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறிய பதிலில், "உக்ரைனில் புடின் அனுதாபம் காட்டவில்லை.
அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி அவருக்கு தெரியவில்லை.உஸ்பெகிஸ்தானில் இரு தலைவர்களும் பேசியது இந்த உண்மையைக் குறிக்கிறது. புடினை எதிர்த்து குரல் கொடுக்காத மற்றும் கடுமையாக இல்லாத நாடுகள் கூட உக்ரைனில் அவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
இதன்மூலம், சர்வதேச சமூகத்திலிருந்து புடின் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.இது முற்றிலும் மோசமானது மற்றும் கொடூரமானது" என்று கூறினார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan