அண்டை நாடுகளுக்கு ஈரானின் கடுமையான எச்சரிக்கை:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ தளங்கள் காணப்படும் நாடுகள் இனி அமைதியை அனுபவிக்க முடியாது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகெர் காலிபாப் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடக தளம் X (Twitter)-இல் வெளியிட்ட பதிவில் அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ படை முகாம்களை கொண்டமைந்துள்ள நாடுகள் “அமைதியை அனுபவிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானின் கெஷம் (Qeshm) கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்த தாக்குதல் தெற்கு அண்டை நாடுகளில் உள்ள ஒரு விமான தளத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து முன்னதாகவே ஈரானின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவையே குற்றம்சாட்டியிருந்தார்.
“இந்த வெளிப்படையான குற்றச்செயலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் தற்போது ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான மேடைகளாக மாறியுள்ளன,” என்று காளிபாப் தெரிவித்துள்ளார்.
“எந்த தாக்குதல் எங்கிருந்து தொடங்குகிறதோ, அதுவே எங்கள் பதிலடி செல்லும் இடமாக மாறும்,” என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.