அவசரமாக அமெரிக்க அரசாங்கத்தை தொடர்பு கொண்ட நாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது புதிய வரிக் கொள்கையை அறிவித்ததன் பின்னர் இதுவரை 50இற்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதாக வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் கெவின் ஹசெட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தை தொடர்புகொள்ளும் நாடுகள், தங்களது வரிச்சுமையை புரிந்துகொண்டதால் இவ்வாறான முன்நகர்வுகளை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இந்தோனேஷியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் ட்ரம்பின் புதிய வரிக் கொள்கைக்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது வரிகளை விதிக்க போவதில்லை என தெரிவித்துள்ளன.
சந்தை அதிர்ச்சிகள்
அத்துடன், இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரிக் கொள்கைகளுக்கு பிறகு உலகளாவிய ரீதியில் பணவீக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனினும், இவ்வாறான சந்தை அதிர்ச்சிகளின் போது விலைமாற்றங்களில் கடினமாக இருக்குமாறு அமெரிக்க வர்த்தகர்களை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
