இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
இந்தியாவின் 18ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி, 543 தொகுதிகளுக்கான வாக்குகளில் 542 தொகுதிகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக குஜராத்தின் சூரத் தொகுதியில் பாரதீய ஜனதாகட்சியின் வேட்பாளர் போட்டியின்றி தெரிவாகிய காரணத்தினால் இன்று 542 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முன்னிலை வாக்கு எண்ணிக்கை
பெரும்பாலும் பகல் 12 மணிக்கு முன்னர் முன்னிலை வாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18ஆவது மக்களவை தேர்தல், இந்தியா முழுவதும் 543 தொகுதிகளிலும் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்தநிலையில், அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 8360 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 744 அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்றன.இதில் 6 கட்சிகள் தேசிய கட்சிகளாகும்.
சட்டசபை தேர்தல்
குறித்த தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 64.2 கோடி பேர் வாக்களித்ததுள்ளனர்.
இன்றைய தினம் முதலில் அஞ்சல் மூல வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், இதன் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என கூறப்படுகிறது.
அத்துடன் சட்டசபை தேர்தல்கள் வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. இதன்படி ஆந்திரா (175), ஒடிசா (147) சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
மேலும் விளவங்கோடு (தமிழ்நாடு) உள்ளிட்ட 25 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளதாக கூறப்பட்டள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |