புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலியான அமெரிக்க டொலர்கள்
100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்க டொலர்களை பயன்படுத்தும் போது, அது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலியான டொலர்கள் அச்சிடப்படுவது குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் போலி நாணயங்கள் தொடர்பான விசாரணை பணியகம், விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளில் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால், போலியான டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam