உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை விமர்சித்துள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை துன்புறுத்துவதற்கு பயன்படுவதுடன், நாட்டின் குடிமக்களை அடிமைகளாக மாற்றும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய சட்டம் 1987ல் இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடக் கொடூரமானது.
நடைமுறை சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.

எனினும் புதிய சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்க முடியும்.
பாதிப்பில்லாத செயல்
எனவே இந்த யோசனைக்கு வாக்களிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தேசத்தையும் மக்களையும் நேசிக்காத ஒருவராகவே முத்திரை குத்தப்படுவார்.
ஒரு நாட்டில் இது போன்ற சட்டங்கள் வரும்போது பயங்கரவாதத்திற்கு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை உள்ளது.

என்ற போதும் இந்த யோசனையில் சில பாதிப்பில்லாத செயல்களும் பயங்கரவாதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri