மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: ரணிலுக்கு இந்தியா அழுத்தம்!
பல வருடங்களாகக் பிற்போடப்படும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017 இல் மாகாண சபைகளின் ஆயுட் காலம் முடிந்ததில் இருந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை.
அப்போது இருந்த மைத்திரி - ரணில் அரசும் சரி, அதன் பின் உருவான கோட்டாபய அரசும் சரி அந்தத் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த தீர்மானம்
2017 இல் இது தொடர்பில் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அதை நிறைவேற்றுவதற்கு அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேவேளை, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலமும் நிறைவடைந்துள்ள நிலையில் அந்தத் தேர்தலை நடத்துவதற்குக்கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசின் கவனமோ ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில்தான். அதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செய்து வருகின்றார்.
இந்தியாவின் மறுக்கப்பட்ட அழைப்பு
இந்தநிலையில்தான் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது என்று அறியமுடிகின்றது.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு வருடமாகின்றது.
ஆனால், அவர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லி சென்று சந்திப்பதற்கு இந்திய
மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதற்குக் காரணம் மாகாண சபைத் தேர்தலை
இலங்கை அரசு நடத்தாமல் இருப்பதே என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
