மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டனில் போராட்டம்: போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (Photos)

Sri Lanka Police Sri Lanka Upcountry People Nuwara Eliya SL Protest
By Thirumal Jun 07, 2022 07:10 AM GMT
Report

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹட்டன் நகரின் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குக் கடந்த 5ஆம் திகதி 6600 லீற்றர் மண்ணெண்ணெய் கிடைத்துள்ளது.

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டனில் போராட்டம்: போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (Photos) | Cory Hutton Fights For Kerosene Traffic Jams

ஏமாற்றமடைந்து திரும்பி சென்ற மக்கள் 

அந்த எரிபொருள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் வரிசையில் கடைசியில் காத்திருந்த பெருந்தொகையான மக்களுக்கு அன்றையதினம் மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்றையதினம் மண்ணெண்ணெய் கிடைக்கும் என எரிபொருள் நிலைய ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து, மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். 

இன்று எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் இல்லை என சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டனில் போராட்டம்: போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (Photos) | Cory Hutton Fights For Kerosene Traffic Jams

போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை 

மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமையை ஏற்படுத்தக்கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிரதான வீதியை மறிக்க வேண்டாம் எனத் தெரிவித்த பொலிஸாரின் கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிராகரித்துள்ளனர். 

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டனில் போராட்டம்: போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (Photos) | Cory Hutton Fights For Kerosene Traffic Jams

அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டம் காரணமாகப் போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியுள்ளது.

குறிப்பாக ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - கண்டி போன்ற பிரதான வீதிகளூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டனில் போராட்டம்: போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (Photos) | Cory Hutton Fights For Kerosene Traffic Jams

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டனில் போராட்டம்: போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (Photos) | Cory Hutton Fights For Kerosene Traffic Jams

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US