கிரிக்கெட் சபையின் இடைக்கால குழுவுக்கு வழங்கப்படும் தீர்பை ஏற்றுக்கொள்ள தயார் : ரொஷான் ரணசிங்க
இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தாயார் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (11.11.2023) கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயார்
மேலும் அவர், இடைக்காலக் குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால், இனிவரும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆதரவு அர்ஜுன ரணதுங்கவுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயார் எனவும் இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
you may like this