விதிமீறும் மதுபான வர்த்தகர்களுக்கு அபராதம்
மதுவரி அதிகாரிகளிடையே ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், மது போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும், அந்த நிறுவனங்களின் மதுபான உரிமங்களை இரத்து செய்யவும் நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
உள்ளூர் மதுபான வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்குள் சிசிரீவி அமைப்புகளை நிறுவ வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம் அந்த அமைப்புகள் மதுவரி திணைக்களத்துடன் இணைக்கப்பட்டு உற்பத்தி செயல்முறையை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
மதுவரி அதிகாரிகளின் மோசடி
சில மதுவரி அதிகாரிகளும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போலி பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபோத்தல்கள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மதுவரி அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கூடுதல் நடவடிக்கையாக, மதுபான உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் அனைத்து மதுவரித்திணைக்கள அலுவலர்களும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (01.09.2023) வரை, போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் 48,000 மதுபான போத்தல்களை மதுவரித்திணைக்களம் கைப்பற்றியுள்ளதாக மதுவரித்திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட போத்தல்களை பறிமுதல் செய்வதுடன், போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட போத்தல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரி விதிக்கவும் மதுவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri