மண்முனை - தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் தொடர்பில் முறைப்பாடு
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
ஆளுநருக்கு கடிதம்..
இவ்விடயம் தொடர்பில் அவர் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த கடிதத்தில், மண்முனை - தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பல ஊழல் மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
அத்துடன் அதிகார துஸ்பிரயோகங்களையும் மேற்கொண்டு வருவதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டும் விடயங்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





