விசேட தேவைக்குட்பட்டோரை பராமரிக்கும் இல்லம் ஒன்றில் 17 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டவர்களை பாராமரிக்கும் இல்லம் ஒன்றில் 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (30.10) வெளியாகின.
அதில், விசேட தேவைக்குட்பட்டவர்களை பராமரிக்கும் இல்லம் ஒன்றைச் சேர்ந்த 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன்
தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.



