லிந்துலை சுகாதார பிரிவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை சுகாதார பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி லிந்துலை ராணிவத்தை தோட்டம், மவுசாஎல்ல தோட்டம், நோனா தோட்டம், வோல்ட்றீம் தோட்டம், அக்கரப்பத்தனை தொன்பீல்ட் ஆகிய தோட்டங்களில் தலா ஒரு தொற்றாளர்கள் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள்.
ஏனைய ஐந்து தொற்றாளர்களும் லிந்துலை தியனலகல தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் வட்டவளை ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள்.
தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
