இலங்கையில் பயன்பாட்டிற்கு வந்த கொரோனா தடுப்பூசி! சுகாதார அமைச்சர் வெளியிட்ட விசேட அறிக்கை
இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra - Zeneca) தடுப்பூசியை சுகாதார பிரிவினருக்கும் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தான் மகிச்சியடைவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்கவால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தான் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
எனினும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த பிரார்த்திப்பதாக சுகாதார அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இலங்கையர்களுக்கு இன்று போடப்பட்டது. இன்றைய தினத்தில் 5286 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வித பக்க விளைவுகளும் இதுவரையில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தினம் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளளதாக விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
