மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர்,வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டுள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் 1200 கொரோனா ஊசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களுக்கு ஏற்றப்பட்டு பின்னர் ஏனையவர்களுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும், அனைவரும் இதனைப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தாதிய உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மீறாவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கொவிட்-19 கான தடுப்பூசி ஏற்றப்பட்டது.
ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள் நாற்பத்து நான்கு (44) பேருக்கு கொவிட்-19 கான தடுப்பூசி மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் வைத்து ஏற்றப்பட்டது.
இதேவேளை, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். சாபிரா வஸீம் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
