முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியேற்றும் திட்டமிடல் கலந்துரையாடல்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயினை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பரவலாக மூன்று கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.
வைவரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்கியை உருவாக்கும் முகமாக முதற்கட்டத்தில் சுகாதார சேவைகள் துறை சார் உத்தியோகத்தர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது கட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையினை அனைவரது ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளும் முகமாக திட்டமிடல் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இன்று மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தடுப்பு மருந்தேற்றல் செயன்முறைகள் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் மற்றும் பிராந்திய தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி விஜிதரன் ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்களிடத்து கொவிட் 19 தடுப்பூசியின் அவசியத்தை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளல் தொடர்பாக அதிக கவனம் செலத்தப்பட்டது.
மாவட்ட மட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயினை தடுக்கும் விதமாக இருபது நிலையங்களில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்தரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர், பிராந்திய தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் அதிகாரி, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டசெயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேசசபை செயலாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.











தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
