வவுனியாவில் 905 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வவுனியாவில் 905 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட “கொவிஷெல்ட்” தடுப்பூசிகளை வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள்கள், இராணுவத்தினருக்கு ஏற்றும் பணி நேற்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு 1700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலை மற்றும் வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது 297 பேர் வவுனியா வைத்தியசாலை சார்ந்தவர்களிற்கும் 108 பேர் சுகாதார துறை சார்ந்தவர்களுமாக 405 பேருக்கு வவுனியா வைத்தியசாலையிலும், 500 இராணுவத்தினருக்கு வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் இன்றையதினமும் ஏனையவர்களிற்கு தடுப்பூசி போடும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.