இலங்கையில் ஒரே நாளில் 5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி - இதுவரை பாதிப்பு இல்லை
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இலங்கையர்களுக்கு இன்று போடப்பட்டது. இன்றைய தினத்தில் 5286 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886 பேருக்கும், கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் 803 பேருக்கும் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் 781 பேருக்கும் இராணுவத்தினர் 600 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கும், ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 382 பேரும், ஹோமாகம வைத்தியசாலை 190 பேருக்கும், முல்லேரியா வைத்தியசாலையில் 108 பேருக்கும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் 80 பேரும் வெலிசர இராணுவ முகாமில் 56 பேரும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரையில் எவ்வித பக்க விளைவுகளும் இதுவரையில் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. நாளை தினம் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளளதாக விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
