இலங்கையில் நாளாந்தம் பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு
நாட்டில் கோவிட் தொற்றால் இன்றைய தினம் இதுவரையில் 3,793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து மேலும் 2,720 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 373,152 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,186 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam