இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக அதிகரித்து செல்லும் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 986 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று இதுவரையில் 3,414 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 359,591 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
குறித்த உத்தரவு இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
