மேல் மாகாணத்திலிருந்து பிற பிரதேசங்களுக்கு கொரோனா அதி வேகமாக பரவும் ஆபத்து! உபுல் ரோஹன
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது மக்கள் மாகாண எல்லைகளை கடப்பதை தடுக்க பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படல் வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது.
மேல் மாகாணத்தில் தற்போது அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கொரோனா தொற்று பிற மாகாணங்களும் பரவலாக பரவும் அதி ஆபத்து நிறைந்த சூழல் காணப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக கொழும்பு நகராட்சி பகுதியில் இருந்து ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றனர்.
அதேபோன்று கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் பிற மாகாணங்களுக்கு செல்லும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாகாண எல்லைகளுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கட்டாயம் விதிக்கப்படல் வேண்டும்.
இல்லையேல் பிற பிரதேசங்களுக்கு கொரோனா அதி வேகமாக பரவும் ஆபத்து காணப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்திருக்கிறார்.