இலங்கையில் கொரோனா பரவல் பாரதூரமான நிலைமையில்! உலக சுகாதார நிறுவனத்தின் கடும் எச்சரிக்கை
இலங்கைக்குள் தினமும் கொரோனா நோயாளிகள் சடுதியாக அதிகரித்து வருவதால், பாரதூரமான பரவல் நிலைமையாக கருதி கடும் பயண தடைகளை விதிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைச்சு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி, இலங்கை மிகவும் சவாலான காலத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
தொற்று நோய் நிலைமையில், இலங்கையின் சுகாதார ஊழியர்கள் பணி சுமைகளை பாராது சேவையாற்றுவதை பாராட்டுவதாகவும் உயிர்களை காப்பாற்றவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் எந்த வகையிலான உதவிகளையும் செய்ய உலக சுகாதார அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தடுப்பூசி மாத்திரம் ஒரு மாற்று வழியில்லை எனவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயண தடைகளை விதிக்க வேண்டியது கட்டாயம் எனவும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை்கான பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.