உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், முகக்கவங்களை அணிவதுடன், தொடர்ந்து கைகளை கழுவும் முறையை கைக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்று, ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிபுணரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
புதிய கோவிட் மாறுபாடு
NB.1.8.1 என்ற புதிய கோவிட் மாறுபாடு உலகளவில் அதிக எண்ணிக்கையில் பரவி வருவதை அடுத்தே, அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

ஓமிக்ரானின் துணை வகையைச் சேர்ந்த இந்த மாறுபாடு முதன்முதலில் 2025 ஜனவரியில் அடையாளம் காணப்பட்டது, பின்னர் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டது.
மே மாத நடுப்பகுதியில், இதன் பரவல் 10.7வீதமாக இருந்தது.
அறிகுறிகள்
தொண்டை புண், காய்ச்சல், இருமல், சோர்வு, தசை வலி போன்றவை இந்த தொற்றுக்கான அறிகுறிகள் என்று சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய மாறுபாடு முந்தைய வகைகளை விட அதிக கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.
எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனினும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam