ஹோமாகமை வைத்தியசாலையில் கொரோனா சடலம் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல்
ஹோமாகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் பல நாட்களாக கொரோனாவால் உயிரிழந்த 5 நபர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் சுகாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஹோமாகமை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் நதீரா தயவங்ச தெரிவித்துள்ளார்.
பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுடைய சடலங்கள் என்பதுடன் அவற்றில் நான்கு சடலங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒரு சடலம் வெளியில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்ய வேண்டும். முஸ்லிம்கள் தகனம் செய்வதை விரும்பாமை மற்றும் சவப்பெட்டிகளை வழங்காமை காரணமாக சடலங்கள் பல நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குளிர்சாதன பெட்டியில் வைக்காது வெளியில் வைக்கப்பட்டுள்ள சடலம் கடுமையாக பழுதடைந்துள்ளதுடன் கடும் துர்நாற்றம் வீசுவதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam