பிரித்தானியாவில் முடிவுக்கு வருகின்றது கோவிட் கட்டுப்பாடுகள்! - அரசாங்கம் அறிவிப்பு
தற்போது அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான பாதையில் பிரித்தானியா பயணிக்கின்றது என அந்நாட்டு சுகாதாரதறை செயலாளர் மட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதுள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் உள்ள நிலவரத்தை பார்த்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனாவில் 2019ம் ஆண்டு இறுதிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட கோவிட் பெரும் தொற்று தற்போது உலகின் அனைத்து நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில், பிரித்தானியாவில் அமுலில் இருந்த கோவிட் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்ப்பட்டு வந்தது. இறுதியாக ஜூன் 21ம் திகதி கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை ஜூலை 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட் பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் திருப்தி அளிப்பதாக சுகாதாரதறை செயலாளர் மட் ஹான்காக் கூறியுள்ளார்.
இதனால் ஜூலை 19 ஆம் திகதி அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான பாதையில் பிரித்தானியா பயணிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோவிட் பாதிப்பு குறைந்தால் ஜூலை 19ம் திகதி அனைத்து கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.
அத்துடடன், கடுமையான குளிர்காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்கதக்து.