கோவிட்டின் அடுத்த அலை..! அமெரிக்காவில் மிரட்டும் தொற்று
அமெரிக்காவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கோவிட் பரவல் அதிகரித்து வந்த நிலையில், அது கடந்த சில மாதமாகச் சிறிதளவு குறைந்தது.
இந்நிலையில் கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல கோவிட் பரவல் ஒவ்வொரு நாடுகளிலும் உருமாற்றம் பெற்று அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சற்று அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை 15ஆம் திகதி மேலும் அதிகரித்து கோவிடால் 7100 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில் கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களாகக் குறைந்திருந்த கோவிட் தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |