பத்தனை கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று
ஹட்டன்- பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் இராணுவத்தினர் நடத்தும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 வயதான சிறுவனும், பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது பீ.சீ.ஆர் பரிசோதனை மூலம் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியுள்ள 4 வயதான சிறுவன் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், 40 வயதான பெண் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ,அவர்கள் இருவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பஹ்ரோன் நாட்டில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் திகதி வந்த 229 பேர் பத்தனை ஸ்ரீபாத கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் இருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அங்குள்ள ஏனையோருக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
இவர்களை நாளைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
