கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
இலங்கை கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஒரு இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 9ம் திகதி வடக்கு கடலில் வைத்து இந்த 9 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
அவர் கிளிநொச்சியில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீதமுள்ள எட்டு இந்திய மீனவர்கள் மீண்டும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam