வெளிநாட்டிற்கு செல்லவிருந்த இளைஞரால் 6 பேருக்கு கொரோனா தொற்று
வெளிநாடு செல்வதற்காக இளைஞர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்ட ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேருடன் சேர்த்து 13 பேர் கம்பளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான 13 பேரும் கம்பளை நகரத்திற்கு அருகில் வாழ்பவர்களாகும். இவர்களில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞரும் அடங்கும்.
கம்பளை இல்லவத்துர பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக பரிசோதனைக்கு சென்ற போது அவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதன் பின்னர் அந்த பிரதேசத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி மேற்கொண்ட பரிசோதனையில் ஏனைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இல்லவத்துர பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய தொற்றாளர்களுடன் கம்பளை நகரத்தில் கோழி இறைச்சி கடையுடன் தொடர்புபட்டிருந்த 40 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri