வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியாவிற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவின் ஊடாக உட்பிரவேசிக்கும் பிரதான வீதியான ஹட்டன் - கொழும்பு மார்க்கத்தின் கலுகல பகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையோர் மேல் மாகாணத்திலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் வருகைத் தந்தவர்கள் என அந்த அலுவலகம் கூறுகின்றது.
அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan