இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்தவுக்கு கொரோனா தொற்று
இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போதே இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பியால் நிசாந்த 2021 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு பின்னர் நாடாளுமன்றத்துக்கு பிரசன்னமாகவில்லை.
இந்தநிலையில் இராஜாங்க அமைச்சர் தொற்றுக்கு உள்ளானமையை அடுத்து அவரின் பணியாளர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இராஜாங்க அமைச்சரின் உறவினர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர்கள் தயாசிறி, வாசுதேவ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
