வைத்தியர் நெவில் பெர்ணான்டோவிற்கு கொரோனா தொற்று! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையில் இன்று மாத்திரம் புதிதாக 715 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 65698 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையான காலத்தில் கொரோனாத் தொற்றில் இருந்து 59043 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 6332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிசிக்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், 330 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
