ஆயிரம் பேரில் 26 பேருக்கு கோவிட் தொற்று
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் கோவிட் தொற்று பரவலின் வேகம் 15 வீதமாக அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கோவிட் சம்பந்தமான புதிய புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேருக்கு 26 பேர் என்ற வீதத்தில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அளவுக்கு இந்த வேகம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி தொடர்பில் மீண்டும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சனத் தொகையில் 68 சத வீதத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இது எண்ணிக்கையில் 29,631,651 ஆகும்.
கடந்த வாரத்தில் மாத்திரம் தினமும் 15 ஆயிரத்து 825 தடுப்பூசிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே தொற்று நோயின் திடீர் அதிகரிப்பு வேகம் மற்றும் மரணங்களுக்கான காரணங்கள் குறித்து தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு ஆராய்ந்து வருகிறது.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam