திருகோணமலை பொது வைத்தியசாலை மருந்தாளர்கள் இருவருக்கு கொரோனா
திருகோணமலை பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்த இரண்டு மருந்தாளர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
காய்ச்சல் தடிமல் காரணமாக அங்கு கடமையாற்றிய மருந்தாளர் தமக்கு சந்தேகம் இருப்பதாக வைத்தியரிடம் தெரியப்படுத்தியதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கந்தளாய் கோவிட் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்தினால் சுகாதாரத் துறையினரை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியும் சில ஊழியர்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் சிலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
