மீரிகம பிரதேச சபை உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா! ஏனையோர் தனிமைப்படுத்தலில்
மீரிகம பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மீரிகம பிரதேச சபையின் தவிசாளர் சரத் நந்தசிறி ரணதுங்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களைக் கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான உறுப்பினர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடம்பெற்ற பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அன்றைய தினம் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் முதல் தொடர்பைப் பேணியவர்கள் என்ற அடிப்படையில் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று மீரிகம பிரதேச சபையின் தவிசாளர் மேலும் கூறினார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
