பிரதான நட்சத்திர ஹொட்டல் ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா
பெந்தோட்டை உள்ள பிரதான நட்சத்திர சுற்றுலா ஹொட்டல் ஒன்றின் 32 ஊழியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை பெந்தோட்டை இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் குறித்த சுற்றுலா ஹொட்டலின் ஊழியர்கள் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் இடங்களில் பெந்தோட்டை பிரதேசம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 3 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan