திருவிழா திருப்பலியில் கலந்து கொண்ட அருட்தந்தை உள்ளிட்ட எட்டு பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்த அருட்தந்தை உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் திருத்தலத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்துகொண்ட எட்டுப் பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த திருவிழாவில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
