பேருந்தில் பயணித்த மாணவனுக்கு கொரோனா: அன்டிஜன் பரிசோதனையில் உறுதி
தென் மாகாணத்தின் நுழைவு இடமாகக் கருதப்படும் பெந்தோட்டை பாலம் அருகே நடத்தப்பட்ட எழுந்தமானமான அன்டிஜென் சோதனையின் போது பேரூந்தில் பயணித்த 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளார்.
இவர் களுத்துறை காவல்துறையில் பணியாற்றும் சிரேஸ்ட அதிகாரியின் ஒருவரின் மகன் அவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து 68 காவல்துறை அதிகாரிகள் அன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் நான்கு பேர் தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டது.
இதேவேளை கடந்த பல நாட்களாக தென் மாகாணத்திற்குள் நுழைந்த 897 பேர் பெந்தோட்டை பாலத்தில் வைத்து அன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் இருவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.