யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.
காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த ஐந்து மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
