காலியில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 9 பேருக்கு கொரோனா
காலி நகரில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் கொரோனா தொற்றாளர்கள் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காலி நகர சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சாலை பணிபுரியும் மிலித்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் இணைப்பாளர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அதில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் 9 பேரில் 6 பேர் காலி நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்து வருபவர்கள். ஏனையோர் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 9 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடை தொழிற்சாலை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்
எதிர்வரும் அக்டோபருக்கு பின் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை