இலங்கையில் 600 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா! வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் 600க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் மதுரம்மான தேவோலகே இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"கர்ப்பிணி பெண்கள் இந்த வைரஸால் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். தற்போது 600க்கும் மேற்பட்ட தாய்மார்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனையும் இடைவிடாது செயல்படுகிறது. இந்நிலையில், மாதாந்த பரிசோதனைகளுக்கு செல்வது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அச்சம் காணப்படுகின்றது.
எனினும், கட்டாயம் பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 194 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
