நுவரெலியாவில் 5 பொலிஸாருக்கு கோவிட் தொற்று
நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மக்களுக்கான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் பொறுப்பதிகாரி கூறினார்.
எனினும், பொலிஸ் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஏனைய அதிகாரிகளை கொண்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றாளர்கள் நுவரெலியா வசந்த கால கொண்டாட்டங்களில் கடமை புரிந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று கண்டி மாவட்டத்தில் 84 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 56
பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
