மாத்தறையில் மருத்துவர் உட்பட 5 பேருக்கு கொரோனா
மாத்தறை நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
மருத்துவமனைக்கு கடமைக்கு வந்த மருத்துவர், ஊழியர், இரண்டு நோயாளிகள் மற்றும் நோயாளிக்கு துணையாக இருந்த பெண் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனையை தற்காலிகமாக மூடுமாறு மாத்தறை நகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தி, மருத்துவமனையை தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்தும் வரை நோயாளிகளை அனுமதிப்பதும், வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஆலோசனை வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி மருத்துவமனையை இயங்கினால், நாளைய தினம் நீதிமன்ற உத்தரவு பெறப்படும் எனவும் குறித்த மருத்துவமனை அடிப்படையாக தகவல்களை மறைத்துள்ளதாகவும் அதற்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளதாக மாத்தறை நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam