நாட்டில் வீரியம் கொண்ட இந்திய மாறுபாடுகளுடன் பரவி வரும் 4 கோவிட் மாறுபாடுகள்
நாட்டில் பரவுகின்ற வைரஸ் மாறுபாடு எதுவாக இருந்தாலும். அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் தொற்று நோயை தடுப்பதற்கான அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென முன்னனி மருத்துவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு துறை மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நீலிகா யமலாவிஜ் இதனை தெரிவித்துள்ளார்.
தொற்று நோயை தடுப்பதற்கு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது பிரித்தானிய மாறுபாடு, தென்னாபிரிக்க மாறுபாடு, பிரேசில் மாறுபாடு ,இந்திய மாறுபாடு , என 4 மாறுபாடுகள் பரவி வருகின்றன.
இவற்றில்
பிரித்தானிய மற்றும் இந்திய மாறுபாடுகளே ஏனைய மாறுபாடுகளை விட வீரியம்
கொண்டவையாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.