மந்திகை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்ற பெருமளவானவர்களுக்கு கோவிட் தொற்று
பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்குக் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 30 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை முடிவாகும்.
அவர்கள் 30 பேரும் மருத்துவர்களின் ஆலோசனையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் எனப் பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
