மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் பகுதிகளில் கொவிட் பரிசோதனை
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறக்கூடிய முக்கிய பகுதிகளில் கோவிட் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு இவ்வாறு எழுமாறான அடிப்படையில் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படும் முக்கிய 12 இடங்களில் இந்தப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
முப்படையினரும், சுகாதார அதிகாரிகளும் இணைந்து இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளனர்.
கொச்சிகடை, கொட்டாதெனியாவ, நிட்டம்புவ, கிரியுல்ல, சமன்பெத்த, ஹங்வெல்ல, அலுத்கம, தினியாவல, இங்கிரிய, பதுருளிய, மீகாதென்ன, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் இந்த விசேட கொவிட் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மாகாணத்திற்குள் பிரவேசிப்போர் மற்றும் வெளியேறும் நபர்களுக்கு விசேட என்டிஜன் பரிசோதனை எழுமாறான அடிப்படையில் நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri