புதுவருடத்தின் பின்னர் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்! - வைத்தியர் சுதத் சமரவீர
புதுவருடத்தின் பின்னர் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம்.
எனினும் அது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என்று இலங்கையின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸூக்குப் பின்னர் கொரோனா தொற்றில் அதிகரிப்பு இருந்தது. எனினும் அது மற்றும் ஒரு அலையின் தோற்றமாக இருக்கவில்லை.
இந்தநிலையில் ஏப்ரல் புதுவருடத்தின் பின்னர் இதேபோன்ற நிலையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களை மீறி பெரிய பொதுக்கூடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பில மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் சமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதன் காரணமாக நாளொன்றுக்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டிச்செல்கிறது.
இந்தநிலையில் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படையில் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று அவர் கூறியுள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam