இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது.
இன்றும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை கூறியுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு
இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 297 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் ஏழு மரணங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
1. கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கடந்த 26ம் திகதி உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட் நோய்த் தொற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நோய்த் தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு, நீரிழிவு நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. இரத்தினபுரி கல்கெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். இருதய நோய், இரத்தம் விசமாகியமை மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் முல்லேரிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 61 வயதான ஆண் கைதியொருவர் கடந்த 16ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் சுவாசப் பிரச்சினையால் இவர் உயிரிழந்துள்ளார்.
7. என்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரகப் பிரச்சினை மற்றும் கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.