இலங்கையில் கொரோனா மரணங்கள் சடுதியாக உயர்வு
இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் நான்கு கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.கொவிட் நிமோனியா மற்றும் மொனின்ஜயிட்ஸ் நோயினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் இரத்தம் விசமான காரணத்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொலன்னாவ பிரதேச்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்று உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாள நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.