கோவிட் அச்சுறுத்தல் : திரும்பப் பெறப்பட்ட அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கை
அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இன்று, மேல் மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமார வெளியிட்ட சுற்றறிக்கையே, திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை தொடர்பில், சமூக ஊடகங்களில், தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கை
குறிப்பாக, இந்த சுற்றறிக்கை மேல் மாகாண சபை கட்டிடத்தில் அமைந்துள்ள மேல் மாகாண அமைச்சுகள் மற்றும் துறைகளின் ஊழியர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்படவில்லை என்றும் தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
